ராய்ப்பூரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நேற்று  நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய இந்திய வீரர் திலக் வர்மாவின் அசாதாரணமான ஃபீல்டிங் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்தப் போட்டியில், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் எய்டன் மார்க்ரம் அடித்த பந்தை, திலக் வர்மா கிட்டத்தட்ட 4 முதல் 5 அடி உயரம் குதித்துப் பிடித்ததுடன், பவுண்டரி கோட்டிற்குள் விழுவதற்கு முன் பந்தை உள்ளே எறிந்து ஐந்து ரன்களை  சேமித்தார். ஈர்ப்பு விசையை மீறி அவர் மேற்கொண்ட இந்தத் திகைப்பூட்டும் முயற்சி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

“>

 

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கெய்க்வாட் மற்றும் விராட் கோலியின் சதங்களால் 358 ரன்கள் எடுத்தது.