உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னூர் புறவழிச் சாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், கல்லூரி ஊழியர் அகிலேஷ் (45) உயிரிழந்ததுடன், அவரது அண்டை வீட்டுக்காரர் அபிஷேக் மற்றும் அவரது மகன் யுவி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
திருமண நிகழ்ச்சிக்குச் சென்று ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த அவர்களை, அதிவேகத்தில் வந்த கார் ஒன்று மோதியதில், மூவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அகிலேஷ் காரின் பானெட்டில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் அகிலேஷ் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.
🚨Bijnor UP- Car collides with bikers, three young men on bike flung into the air, flung several feet up in the air from the car, one k!lled in the accident, 2 people injured, incident occurred on Chandpur Bypass Road police station area. pic.twitter.com/YH0fFxdOn9
— Deadly Kalesh (@Deadlykalesh) December 2, 2025
“>
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், “மாவட்டத் துணைத் தலைவர், , பிஜ்னூர், யுபி” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த அபிஷேக் மற்றும் அவரது மகன் யுவி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மொராதாபாத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து முறையான புகார் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
