அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்தது முதல், அரசியல் களத்தில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகளில் இணைந்தால், பெரும்பாலும் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவி மட்டுமே கிடைக்கும். ஆனால், தற்போது தவெகவில் இணைந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளது” என்று கூறுகின்றனர். இந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே, தற்போது பல்வேறு கட்சி நிர்வாகிகள், குறிப்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அதிருப்தியாளர்கள், தவெகவில் இணைய மும்மரமாக முண்டியடிக்கின்றனர் என்கின்றனர்.

தொடர்ந்து பேசிய அரசியல் விமர்சகர்கள், “செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளின் வரவு, விஜயின் ‘மாற்றம்’ என்ற முழக்கத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. களத்தில் இருக்கும் மக்கள் மனநிலையைப் பொறுத்தவரை, தவெகவின் எழுச்சிக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, தவெக  ஆட்சியைப் பிடித்தால்  இதன் விளைவாக, தவெகவில் இணையும் நிர்வாகிகள், வெறும் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆசைப்படாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான பெரிய கனவுடன் இணைகின்றனர் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.