கேரள அரசு 2019-ஆம் ஆண்டில் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு, ரூ. 2,150 கோடி திரட்டியதில், அந்நிய செலாவணி (ஃபெமா) விதிமுறைகளை மீறியதாகவும், நிதியைச் சட்டவிரோதமாகத் திசை திருப்பியதாகவும் அமலாக்கத்துறை (ED) குற்றம் சாட்டுகிறது.

இந்த வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சம்மன் (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது. ₹.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே வழக்கில், பினராயி விஜயன், அவரது தனிச் செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தச் சம்மன் பாஜகவின் அரசியல் விளையாட்டு என ஆளும் இடதுசாரி கூட்டணி விமர்சித்துள்ளது.