வாகனங்களின் அரசன் என்று அழைக்கப்படும் ரயில்கள், அதிவேகத்தில் வரும்போது மோதினால் உயிர் பிழைப்பது அரிது. அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு மாடு, வரவிருக்கும் மரணத்தை உணராமல், அதிவேக ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகிப் பலரை உலுக்கியுள்ளது. அதிகாலையில் தண்டவாளத்தில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருக்க, மக்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வருகிறது. ரயிலின் வேகத்தை உணராமல் மேய்ந்துகொண்டிருந்த மாடு, கண் இமைக்கும் நேரத்தில் வந்த ரயிலின் மூலையில் மோதியதில் அதன் உடல் துண்டு துண்டாகச் சிதறி, இரத்தம் தோய்ந்த காட்சியாக மாறியது. அந்த இடத்தில் மாடு இருந்ததற்கான சுவடுகூட இல்லாமல் போன இந்தக் கொடூரக் காட்சி பார்ப்பவர்களைத் தூக்கமின்றித் தவிக்கச் செய்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by LOCO PILOT RAJDHANI 🇮🇳 (@locopilotrajdhani)

locopilotrajdhani என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தால் பகிரப்பட்ட இந்தக் காணொளியை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். பலர் இதற்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், “புகைப்படம் எடுத்தவர் நினைத்திருந்தால் மாட்டின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்” என்று எழுதியுள்ளார். மற்றுமொரு பயனர், “ரயிலின் வேகத்தை நினைத்துப் பாருங்கள்! ஒரு நொடியில் மாடு இல்லாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், “மிகவும் வேதனையான மரணம், எனக்குத் தூக்கமே போய்விட்டது” என்று தனது மனவேதனையைப் பகிர்ந்துள்ளார். தண்டவாளங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கும், ரயில் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன எனவும் ரயில்வே அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.