சமூக வலைத்தளங்களில் தற்போது ஸ்டிக் மிட்டாய் (Stick Candy) தயாரிக்கும் தொழிற்சாலை வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த மிட்டாய்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை இந்த வீடியோ முழுமையாகக் காட்டுகிறது.
ஆரம்பத்தில் பெரிய பாத்திரத்தில் கொதிக்கும் சர்க்கரைப் பாகு போன்ற கலவை காட்டப்படுகிறது. பின்னர் அதில் பல்வேறு இரசாயன சுவையூட்டிகளும் கவர்ச்சியான நிறத்தை அளிக்கும் செயற்கை உணவு வண்ணங்களும் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கலவை குளிர்ந்த பிறகு, மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அதை மாவு பிசைவது போல கைகளாலும், சில இடங்களில் கால்களாலும் மிதித்துப் பிசைகிறார்கள்.
இந்தக் கலவையை இழுத்து வளைப்பதன் மூலம் அதன் பளபளப்பும் நெகிழ்வுத்தன்மையும் அதிகரிக்கின்றன. இறுதியாக, அந்தக் கலவை சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்டிக் மிட்டாய்களாக மாறுகிறது.
View this post on Instagram
“>
@smartest.worker என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 7 லட்சத்து 87 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தத் தயாரிப்பு முறையைப் பார்த்த பல பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். “இனி என் குழந்தைகளுக்கு இந்த மிட்டாயை வாங்கிக் கொடுக்கவே மாட்டேன்”, “இந்த வீடியோவைப் பார்த்ததும் வாந்தி வருகிறது”, “இதைச் சாப்பிட்டால் நேராக மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும்” எனப் பலரும் பதட்டத்துடனும் அருவருப்புடனும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சுகாதாரமற்ற தயாரிப்பு முறையால், இனி இந்த மிட்டாய்களைச் சாப்பிடுவதற்கு முன் ஒருமுறைக்கு பத்து முறை யோசிப்போம் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
