மனிதர்களைப் போலவே விலங்குகளும் கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துவது என்பது அரிதான நிகழ்வு. அதனால்தான், ஒரு குட்டி ஒராங்குட்டான், தனது விருப்பமான பழத்தை யாரோ ஒருவர் நசுக்கியதால், மனிதக் குழந்தையைப் போல தரையில் படுத்து அழுது, அடம்பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒராங்குட்டானின் இந்த அப்பாவித்தனமான கோபம் இணையத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், சிரிக்கவும் வைத்துள்ளது. பொதுவாக, குழந்தைகள் சிறு சிறு விஷயங்களுக்காக அடம் பிடிப்பதும், உணவுக்காக ஏங்குவதும் சகஜம். ஆனால், இந்த விலங்குக் குட்டியும் அதே குணத்தைக் வெளிப்படுத்திய விதம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
— puppies🐶 (@mayan86743) November 27, 2025
“>
காட்டில் இருந்த ஒராங்குட்டான் குட்டி ஒன்று தனது அருகில் இருந்த வாழைப்பழத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த நபர் ஒருவர், அந்தப் பழத்தின் மீது கால் வைத்து மோசமாக நசுக்குகிறார். இதனால், சாப்பிட முடியாத நிலைக்கு அந்தப் பழம் செல்கிறது. இதைக் கண்ட ஒராங்குட்டான், முதலில் கோபமடைந்து, பின் மனிதக் குழந்தையைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழுததுடன், தரையில் படுத்து அடம் பிடிக்கிறது.
— puppies🐶 (@mayan86743) November 27, 2025
குரங்குகள் வாழைப்பழத்தை விரும்புவது அறிந்ததே. ஒராங்குட்டானும் குரங்கு வகையைச் சேர்ந்தது என்பதால், அதன் விருப்பமான உணவை யாரோ ஒருவர் இவ்வாறு செய்தது அதற்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் அளித்துள்ளது.
