தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு முன்னர், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் கொடுத்த தோல்விக்குப் பிறகு, அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு பெரிய தோல்விகள் ரசிகர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.
Crowd is cooking Gambhir.💀 pic.twitter.com/llcpCZLoAQ
— Gems of Cricket (@GemsOfCrickets) November 28, 2025
நவம்பர் 30, 2025 அன்று ராஞ்சியில் நடைபெறவுள்ள இந்தியா vs தென் ஆப்பிரிக்கா முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் பயிற்சி அமர்வைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகர், கௌதம் கம்பீரை வெளிப்படையாகக் கண்டித்து முழக்கமிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவில், ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர், “நாங்கள் சொந்த மண்ணில் 3-0 என்று தோற்றோம், பிறகு தென் ஆப்பிரிக்காவிடமும் தோற்றோம். பயிற்சிப் பதவியிலிருந்து விலகுங்கள்! சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை எங்களால் தோற்கடிக்க முடியாவிட்டால், 2027 உலகக் கோப்பையை மறந்துவிடுங்கள்” என்று ஆவேசத்துடன் கோஷமிட்டார்.
இந்த டெஸ்ட் தொடர் பின்னடைவுக்குப் பிறகு, வரும் நவம்பர் 30 அன்று தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து டி20 தொடர் மூலம் விமர்சகர்களைச் சமாளித்து பதிலடி கொடுக்கக் கம்பீருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
