வேலை இல்லாத காரணத்தினால் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்குக் மகிழ்ச்சியளிக்கும் விதமாக, அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த ஒரு பெண் ‘பம்பர்’ ஆஃபர் ஒன்றை அளித்துள்ளார். பொதுவாக, வேலையில்லாத இளைஞர்களுக்குப் பெண் கொடுக்கப் பெற்றோர் தயங்கும் சூழலில், இந்தி பேசும் பிராந்தியத்தைச் சேர்ந்த ப்ரீத்தி என்ற அந்தப் பெண், தனக்குக் கணவராக வருபவர் வேலையில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anup Kumar Anup (@anup_kumar_444)

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் அவர், “நான் உங்களுக்குச் சில தகவல்களைத் தெரிவிக்க வேண்டும், என் பெயர் ப்ரீத்தி. ஒரு நற்செய்தி என்னவென்றால், உங்களில் ஒருவருக்கு மனைவியாகப் போகும் நான், அரசுப் பள்ளியில் டி.ஜி.டி. ஆசிரியர் பணியில் சேர உள்ளேன். நீங்கள் நிம்மதியாக உங்கள் வேலையைச் செய்யலாம், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். ஏனென்றால், நமது எதிர்காலத்தை நான் சேமித்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அரசுப் பணிக்குச் செல்லவுள்ள அந்தப் பெண், தனது எதிர்காலக் கணவருக்கு அனுப்பியதாகக் கூறிய இந்தச் செய்தி, வேலையில்லாத இளைஞர்கள் மத்தியில் கடும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பெட்டியில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பல இளைஞர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், “இவர் இப்போது எனது மனைவி, யாரும் வேறு முயற்சி செய்ய வேண்டாம்” என்று உரிமையுடன் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொருவர், ‘அதிர்ஷ்டசாலிதான்’, அரசுப் பணியில் உள்ள இப்படி ஒரு மனைவி கிடைக்கப்போகிறவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர், “இந்தப் பெண் இப்போது யாருடைய காதலி ஆவார்?” என்றும், இன்னும் சிலர் வேடிக்கையாகவும், திரைப்பட பாணியிலும் வசனங்களைப் பதிவிட்டும் வருகின்றனர். மொத்தத்தில், அந்தப் பெண் கூறிய இந்தச் செய்தி, வேலையில்லா இளைஞர்களின் நாளை இனிமையாக்க போதுமானதாக உள்ளது.