ஓஹான் எம் ராய் என்பவர் ஒரு டெக்னாலஜி பிரியர். வயிற்றில் இருக்கும் பசிச் சத்தம் கேட்டால், தானாகவே உணவை ஆர்டர் செய்துவிடும் ஒரு AI கருவியை அவர் கண்டுபிடித்துள்ளார். இதை அவர் தன் இடுப்பில் பெல்ட் போல மாட்டிக்கொள்கிறார். இதற்குப் பெயர் “MOM” என்று வைத்துள்ளார். இது எப்படி வேலை செய்கிறது என்றால், அவர் தன் சகோதரியின் மருத்துவ ஸ்டெதஸ்கோப் போன்ற சில பொருட்களை வைத்து இந்தக் கருவியை உருவாக்கினார். வயிற்றில் சத்தம் வரும்போது, அதைக் கேட்டு, அவருக்குப் பசிக்கிறதா என்று Claude AI என்ற மென்பொருள் முடிவு செய்து, உடனே Zomato-வில் ஆர்டர் போட்டுவிடுமாம்!

View this post on Instagram

A post shared by ZIKI (@zikiguy)

​இந்த ஓஹான் எம் ராய், மங்களூருவைச் சேர்ந்தவர். இவர் “zikiguy” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பல புதிய டெக்னாலஜி வீடியோக்களைப் போடுகிறார். இவர் இன்ஜினியரிங் படித்தவர், சில நிறுவனங்களில் வேலை பார்த்த பிறகு, சொந்தமாக ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனியைத் தொடங்கி உள்ளார். இதற்கு முன்பு, இவர் தானே உருவாக்கிய விமானத்தைப் (Drone) பயன்படுத்தி ஒரு முறை Zomato-வில் உணவு டெலிவரி செய்து பெரிய அளவில் பேசப்பட்டார்.