எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு தாய் தனது குழந்தையுடன் எஸ்கலேட்டரில் வரும்போது, குழந்தையைப் பிடித்து அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, தனது சூட்கேஸை மட்டும் பத்திரமாக எஸ்கலேட்டரில் கொண்டு செல்கிறார். தாய்க்குப் பின்னால் வந்த அந்தக் குழந்தை, எஸ்கலேட்டரில் இறங்க முடியாமல் திக்கித் திணறுகிறது. தாயின் அலட்சியத்தைப் பார்த்த அங்கிருந்த பணியில் இருந்த காவலாளி ஒருவர் உடனடியாகச் செயல்பட்டார்.
This mother is taking the escalator, prioritizing her suitcase over her child.👇🤔😨 pic.twitter.com/oHm2n1qlpX
— Mr.Decent.🦅 (@Mrdecent000) November 26, 2025
அந்த மனிதநேயமிக்கக் காவலாளி, ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு, எஸ்கலேட்டர் வழியாகக் கீழே இறங்கிக் குழந்தையை அவளது தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தார். இந்தக் காணொளி வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்தக் தாயின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். “அந்தப் பெண்ணுக்குக் குழந்தையைவிடச் சூட்கேஸ்தான் முக்கியமாகி விட்டதா?” என்ற ரீதியில் கோபத்துடன் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
