சிங்கம் ‘காட்டுக்கு ராஜா’ என்று அழைக்கப்பட்டாலும், யானை மற்றும் காண்டாமிருகம் போன்ற சில பிரம்மாண்டமான வன விலங்குகளைக் கண்டால் அதுவும் பயப்படும். அவற்றின் உருவ அளவு காரணமாகவே இந்த அச்சம் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு யானைக்கும், பெண் சிங்கம் ஒன்றுக்கும் இடையில் நடக்கும் சண்டைக் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ, சிங்கம்தான் காட்டுக்கு ராஜா என்று கூறப்பட்டாலும், உண்மையான ராஜா யானைதான் என்பதை நிரூபிப்பதாக இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வைரல் வீடியோவில், ஒரு பெண் சிங்கம் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு யானை அருகில் வருவதைப் பார்க்கலாம். யானை தன்னைத் தாக்குமோ என்ற அச்சத்தில் பெண் சிங்கம் உடனடியாக எழுந்து நிற்கிறது. யானையும், சிங்கம் தன்னைத்

 

View this post on Instagram

 

A post shared by Wildfriends Africa (@wildfriends_africa)

தாக்கிவிடுமோ என்று அஞ்சி, மரத்திலிருந்து விலகிச் சென்று பயமுறுத்த முயல்கிறது. உருவத்தில் மிகப் பெரியது யானை என்பதால், இரண்டும் மோதிக் கொண்டால் சிங்கத்துக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை அது உணர்ந்திருக்க வேண்டும்.

எனவே, தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவிடுவதுதான் சிறந்தது என்று சிங்கம் முடிவெடுத்து, அங்கிருந்து சர்வ சாதாரணமாகப் பயந்து ஓடுகிறது. இந்த வனவிலங்கு காணொளி தற்போது 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், “காட்டின் உண்மையான ராஜா யார் என்று யானை காட்டிவிட்டது” என்றும், “சிங்கம் பலசாலிதான், ஆனால் யானையை யாரும் சீண்டக்கூடாது” என்றும் பலர் எதிர்வினைகள் ஆற்றி வருகின்றனர்.