அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது சட்டப்பேரவை உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உயர்ந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். உடல் நலம் சீராகி வருவதால், மேலும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
