பெங்களூருவில் ஒரு டாக்சிக்குள் ஒட்டப்பட்டிருந்த பயணிகளுக்கான ஆறு விதிகள் அடங்கிய சுவாரஸ்யமான அறிவிப்புப் பலகை இணையத்தில் வைரலாகி, விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு ரெடிட் பயனர் பகிர்ந்த இந்த அறிவிப்பில், “எங்களை ‘பையா’ (அண்ணன்) என்று அழைக்காதீர்கள்” மற்றும் “மரியாதையாகப் பேசுங்கள்” போன்ற விதிகள் இடம் பெற்றிருந்தன.

​அந்த டாக்சி ஓட்டுநர் வெளியிட்ட 6 விதிகள் இவைதான்:

  1. ​நீங்கள் வண்டியின் உரிமையாளர் இல்லை.
  2. ​வண்டியை ஓட்டுபவரே வண்டியின் உரிமையாளர்.
  3. ​மரியாதையாகப் பேசுங்கள்; மரியாதை காட்டுங்கள்.
  4. ​கதவை மெதுவாக மூடுங்கள்.
  5. ​உங்களது ஆட்டிட்யூடை (Attitude) பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள், தயவுசெய்து எங்களிடம் காட்ட வேண்டாம். ஏனெனில், நீங்கள் எங்களுக்கு அதிக பணம் கொடுக்கவில்லை.
  6. ​எங்களை ‘பையா’ என்று அழைக்க வேண்டாம்.

​மேலும், வண்டியை வேகமாக ஓட்டும்படி வற்புறுத்த வேண்டாம் என்றும் ஓட்டுநர் குறிப்பிட்டிருந்தார்.

​இந்த அறிவிப்பைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், “பணம் அதிகம் கொடுத்தால் கெட்ட குணத்தைத் தாங்கிக்கொள்வீர்களா?” என்றும், “இந்த விதிகள் முரண்பாடாக உள்ளன” என்றும் கேள்விகளை எழுப்பினர். அதேசமயம், மற்றொரு பயனர், “தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தால், இந்த விதிகள் நியாயமற்றவை அல்ல” என்று ஓட்டுநருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.