புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘SIR’ குறித்த கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அந்தச் செய்தியாளரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஏய் உனக்கு என்ன பிரச்சனை? – சினம் கொண்டு சீறிய சீமான்!#NTK #Seeman #Angry #Pressmeet #puducherry #MetroProject #india #political #zeetamilnews pic.twitter.com/8H2RMBjKla
— Zee Tamil News (@ZeeTamilNews) November 23, 2025
“>
இந்தச் சம்பவம் தொடர்பாக, சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
