இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில், அது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தொடர் சிகிச்சை பெற்று வரும் அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தத் திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இரு குடும்பத்தினர் மத்தியிலும் சோகம் நிலவுகிறது.
