மேற்கு வங்கத்தில் பாஜக பெண் ஊழியர் ஒருவர், திரிணாமூல் காங்கிரஸின் குண்டர்களால் மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டதாகக் கூறி, அதிர்ச்சி அளிக்கும் வீடியோவை மேற்கு வங்க பாஜகவின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரைடிகி பகுதியில் உள்ள தேபிபுர் என்ற இடத்தில், தனது சொந்த நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக ஊழியரை, திரிணாமூல் குண்டர்கள் தாக்கி, அவருடைய வீட்டின் மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகப் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

<a href=”http://

“>மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ள பாஜக, இது குறித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.