திண்டுக்கல்லில் உள்ள தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள்  இந்திரா இல்லத்தில் இன்று (நவ. 21) ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நூற்பாலை ஒன்றில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனையில் ஈடுபட்டனர். ஆளும் கட்சி அமைச்சரின் மகள்  இல்லத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.