உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் டேனிஷ் என்ற நபர், தனது மனைவியை பணயமாக வைத்துச் சூதாடியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூதாட்டத்தில் டேனிஷ் தோல்வி அடைந்ததால், அவரது மனைவி, அவருடன் சூதாடிய எட்டு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு, டேனிஷ், அவரது மனைவியைக் கணவரும் சேர்ந்து ஆற்றில் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, ஆற்றில் தள்ளப்பட்ட அந்தப் பெண், மற்றவர்களால் மீட்கப்பட்டார். தன்னைத் தாக்கியது குறித்தும், கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் செய்த கொடுமைகள் குறித்தும் மீட்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், டேனிஷ், எட்டு பேர் கொண்ட கும்பல், மாமனார் மற்றும் மாமியார் உட்பட மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.