மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, மலாட் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரார் கிராமப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இந்த மாணவி, சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பலைச் சந்தித்த நிலையில், அவர்கள் படிப்படியாக அவரை மூளைச்சலவை (Brainwashing) செய்து, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து, இறுதியாகக் கட்டாயப் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவரை வலுக்கட்டாயமாக மல்வானியில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரை மன ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததோடு, ஒரு நாயுடன் உடலுறவு கொள்ளவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த கொடூரச் செயலை ஆபாசமாக வீடியோ பதிவு செய்த அந்தக் கும்பல், அதை மாணவியின் தாயாருக்கு அனுப்பி, மிரட்டி ரூ.30,000 பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆபாச வீடியோ மூலம் முதலில் பணம் பறித்த அந்தக் கும்பல், பின்னர் மாணவியை விடுவிக்காமல், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவியை குஜராத் மாநிலம் சூரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குப் பல மருத்துவ ஆவணங்களில் கையெழுத்திட மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு, மாணவிக்கு பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்ய அழுத்தம் கொடுத்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது, மல்வானிக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் பிணைக் கைதியைப் போல வைக்கப்பட்டு, தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்தக் கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, கடந்த நவம்பர் 13-ஆம் தேதி மாணவி தப்பித்து வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய மாணவி, நடந்த முழு சம்பவத்தையும் தனது தாயிடம் கூறிய பிறகு, உடனடியாக மலாட் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கண்டிவாலி குற்றப்பிரிவு போலீசார், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளான பாஸ்கர் ஷெட்டி, காவேரி நிகம், நதிரா ஷேக் (எ) நவாஸ் மற்றும் மஹி கான் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இந்தக் கொடூரச் சம்பவம், மும்பை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.