சமூக வலைத்தளங்களில் ஒரு வேடிக்கையான காணொளி தற்போது அதிரடியாகப் பரவி வருகிறது. ஒரு காட்டுப் பகுதியில் இரண்டு புலிகள் அமர்ந்திருக்க, அவற்றைக் கேலி செய்யும் நோக்குடன், ஒரு நபர் பெண் புலியின் உடைகள் மற்றும் முகமூடியுடன் மெதுவாக அவற்றின் அருகில் செல்கிறார். அவர் புலியின் உடையையும், தலையில் தொப்பியும் அணிந்திருந்ததால், பார்ப்பதற்கு அச்சு அசல் பெண் புலி போலவே அவர் காணப்படுகிறார்.

 

அமைதியாக இருக்கும் காட்டுச் சூழலில், அந்த நபர் மெதுவாகப் புலிகளை நெருங்குவது, அவர் ஏதோ கேலி செய்யவோ அல்லது அச்சுறுத்தவோ முயல்வது போலக் காட்சியளிக்கிறது. புலிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு அந்த நபர் அருகில் சென்றதும், புலிகள் அவரைப் பார்த்து முதலில் சற்றுத் தயங்கின. அது உண்மையானதா அல்லது போலியா என அவை குழப்பமடைந்தன போல் தோன்றியது. ஆனால், விரைவில் ஒரு புலிக்கு சந்தேகம் ஏற்படவே, அது அந்த நபரின் மீது தன் காலால் லேசாகத் தட்டுகிறது. புலியின் இந்தத் திடீர் அசைவால், அந்த நபரின் தலையில் இருந்த புலி முகமூடி கழன்று விழுகிறது.

அவரது உண்மையான முகம் வெளிப்படுகிறது. அதிர்ச்சியில் உறைந்த அந்த நபர், பயந்துபோய் திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடத் தொடங்குகிறார். அவர் பதற்றத்தில் ஓடும் நிலையைக் கண்டால் சிரிப்பு வந்துவிடுகிறது. அந்த நபர் ஓடத் தொடங்கியதும், புலியும் சற்றுத் தூரம் துரத்திச் செல்கிறது. இந்த திகில் கலந்த வேடிக்கையான வீடியோவை @naiivememe என்ற எக்ஸ் பக்கத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.