தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.12) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, டெல்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் வடக்கு மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களுக்குக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
