வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி மூனாப் டிப்போ பகுதியில் பீடி வேலை செய்து வந்த மௌலா(50) என்பவரின் ஓலை வீட்டில் இன்று மாலை திடீரென தீ பிடித்து எறிய தொடங்கியது. உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறையினரும், குடியாத்தம் நகர காவல் துறையினரும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
