தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் மாறி மாறி மற்ற கட்சியின் நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு முக்கியமான கட்சித் தாவல் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியைச் சேர்ந்த  ஊராட்சியின் அதிமுக உறுப்பினர் ஏழுமலை, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். மயிலம் தொகுதியில் அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட இவர், முன்னாள் திமுக அமைச்சரான செஞ்சி மஸ்தான் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த திடீர் இணைப்பு, தேர்தல் நெருங்கும் வேளையில் அந்தப் பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.