நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.), எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் தொடர்பாக 2ஆம் கட்ட நிர்வாகிகள் மத்தியில் குழப்பமும், ஏமாற்றமும் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர்துயரதுக்கு – பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என இளம் நிர்வாகிகள் விரும்பியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் விஜய்யின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனித்து நின்றால் அது தி.மு.க.வுக்குச் சாதகமாக அமையும் என்று கருதி, தேர்தல் சீட்டுகளைக் கேட்பதற்கே நிர்வாகிகள் தயக்கம் காட்டுவதாகவும் பேசப்படுகிறது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடுவது பற்றிய தலைமைக் கழகத்தின் மனமாற்றத்தால், த.வெ.க.வின் தலைமை தற்போது குழப்பமான ஒரு நிலையில் உள்ளது.
