அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகளும் தொண்டர்களும் திமுகவில் இணைய உள்ளனர் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில், திமுக ‘பம்பரமாய் சுழன்று’ வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியான கே.ஏ.செங்கோட்டையன் விவகாரத்தால் தற்போது அதிமுகவில் உள்ள நிர்வாகிகளிடம், அமைச்சர் முத்துசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனால், ஈரோட்டில் விரைவில் மாபெரும் இணைப்பு விழாவுக்கு திமுக தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
