உக்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்யா தனது ராணுவ வலிமையைப் பலப்படுத்தும் விதமாக, சூப்பர்ஜெட் பிடி-8 (Superjet PD-8) என்ற உலகின் முதல் ‘வானிலை எதிர்ப்பு’ கொண்ட போர் விமானத்தின் (Weatherproof Fighter Jet) சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. ரஷ்யாவின் இந்த புதிய போர் விமானம் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான சக்திவாய்ந்த எஞ்சின்களைக் கொண்டுள்ளது.
ரஷ்ய பொறியாளர் அலெக்சி தலைமையிலான குழு உருவாக்கியுள்ள இந்த ஜெட், மழை, புயல், மின்னல் என எந்தவொரு மோசமான வானிலை சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் இதுவரை எந்த நாடும் சாதிக்காத ஒரு தொழில்நுட்ப மைல்கல்லை ரஷ்யா அடைந்துள்ளது.
🚨🇷🇺✈️ Russia’s fully homegrown Superjet is now weatherproof
Powered by Russian-made PD-8 engines, the fully indigenous Superjet has successfully passed water-ingestion tests — proving it’s ready to fly through rain and storm pic.twitter.com/EpLG8Y58Z4
— Sputnik India (@Sputnik_India) November 7, 2025
பிடி-8 ஜெட் இலகுரக, சக்திவாய்ந்த மற்றும் முற்றிலும் உள்நாட்டு எஞ்சின் கொண்டதாகும். இதன் திறனைச் சோதிக்க, வானம் இருண்டு, பலத்த காற்று வீசியபோது, செயற்கை மழை மற்றும் மின்சார மின்னல்கள் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. பொதுவாக, இத்தகைய சூழ்நிலைகளில் மற்ற ஜெட் விமானங்களின் என்ஜின்கள் நின்றுவிடும்.
ஆனால், பிடி-8, மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசிய காற்றையும், தண்ணீர்க் குளிப்பையும் பொருட்படுத்தாமல், 20 நிமிடங்களுக்கு மேலாகச் சீராகப் பறந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனைக்குப் பிறகு, இந்த விமானம் உலகின் மிகவும் வானிலை-எதிர்ப்பு திறன் கொண்ட போர் விமானம் என்று நிரூபிக்கப்பட்டது.
இது ரஷ்யாவின் தொழில்நுட்ப சுதந்திரத்தின் அடையாளம் என்றும், போரில் மட்டுமின்றி ஆர்க்டிக் மற்றும் மீட்புப் பணிகளிலும் பயன்படும் என்றும் விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
