ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பவ்டி அருகே, பிரமாராம் என்பவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் குறைந்தது 14 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. வெல்டிங் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாகத் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து காயமடைந்தவர்களில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கர விபத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.