கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றி கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் கட்சியின் அடுத்த கட்ட தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மாமல்லபுரத்தில் இன்று சிறப்பு பொது குழு கூட்டம் நடைபெற இருந்தது.
இதற்காக மாமல்லபுரத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் காரில் வந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக பேனர்கள், கொடிகளை போலீசார் அகற்றியுள்ளனர். இதனை பார்த்த விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். தவெக-வுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுப்பதாக கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அனுமதி பெறாமல் பேனர்கள், கொடிகள் வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
