தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான பொன்முடி, மீண்டும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாகப் பேசிய சர்ச்சையில் சிக்கியதால் அவர் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே உயர்பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேபோல், அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
