2021ஆம் ஆண்டுத் தேர்தலில் டெல்டா பகுதியில் இழந்த வெற்றியை, வரவிருக்கும் தேர்தல்களில் மீண்டும் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் நபராகச் சென்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) பார்வையிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், மாற்றுக்கட்சியினரை அ.தி.மு.க.வில் இணைக்கும் பணிகள் டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

“>

 

அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகி செல்வி சேவியர், தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அவர் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இந்த இணைவு, டெல்டா பகுதியில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளுக்கு மேலும் பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது