இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன், இன்று (அக். 31) தெலங்கானா மாநில அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்திருந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போதிலும், அசாருதீனுக்குச் சட்ட மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, ஒவ்வொரு முறையும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டு வந்த அமைச்சரவைப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர் மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார்.