கரூரில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், கட்சியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தவெகவின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளின் பாதுகாப்பு மற்றும் திட்டமிடலுக்காக, காவல்துறையில் ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் திட்டமிடல் குழுவில், ஓய்வு பெற்ற உளவுத்துறை (IB) இயக்குநர், டி.ஜி.பி. (DGP), ஏ.டி.ஜி.பி. (ADGP) போன்ற உயர் பதவிகளில் இருந்த சுமார் 15 அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
காவல்துறையின் அனுபவமிக்க இந்த அதிகாரிகளைக் கொண்டு, தனது அரசியல் நிகழ்வுகளைச் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் திட்டமிட்டு நடத்த விஜய் இந்த ‘சூப்பர் திட்டத்தை’ வகுத்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
