மாலை மற்றும் இரவு நேரங்களில் ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை (Infertility) ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஓர் அதிர்ச்சியூட்டும் ஆய்வு கண்டறிந்துள்ளது. செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு, விந்தணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் செயல் திறன் மற்றும் ஆயுளைக் கடுமையாகப் பாதிக்கின்றது.

மேலும், விந்தணுக்களின் டி.என்.ஏ-யிலேயே (DNA) பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தரவுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் இந்த விகிதம் உயருவது சமூகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்தக் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள, ஆண்கள் அனைவரும் இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைச் சற்றுக் குறைத்துக் கொள்வது அவசியம்.

படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைலைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, அல்லது அதை உடலிலிருந்து விலக்கி வைப்பது போன்ற எளிய பழக்கங்கள் மூலமாக இந்தக் கதிர்வீச்சுப் பாதிப்பில் இருந்து விந்தணுக்களைப் பாதுகாக்கலாம். ஆண்களே, உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில் தான் உள்ளது!