கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அவிநாஷ் போஸ்லே (Avinash Bhosle) என்ற கணவர், தனது மனைவியை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணுடன் லாட்ஜில் இருந்தபோது மனைவியிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். பல வருடங்களாகத் திருமணம் ஆகியும், அவர் தவறான பழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். கணவரின் இந்த நடத்தை பற்றித் துப்பு தெரிந்த மனைவி, திடீரெனத் தன் தந்தையுடன் சேர்ந்து சிக்கோடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜுக்குச் சென்றுள்ளார். அங்கே, தனது கணவரை அவரது காதலியுடன் கண்டபோது, ஆத்திரமடைந்த மனைவி கொந்தளித்துப் போனாள்.

​கோபத்தில் கொதித்த மனைவி, கணவரைத் தரதரவென்று இழுத்து வந்து நடுரோட்டில் வைத்துச் செருப்பால் அடிக்கத் தொடங்கினாள். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட முறை ஓயாமல் செருப்பால் அடித்ததால், செருப்பே கிழிந்து போனதாம். இந்த ஆக்ரோஷமான சம்பவத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்தனர். ஆனால், மனைவியின் கோபத்தைப் பார்த்து யாரும் அவர்களைப் பிரிக்கத் துணியவில்லை. மேலும், பெண்ணின் தந்தையும் moral support கொடுத்து, அவரும் இரண்டு முறை மருமகனை அடித்தாராம். இந்தச் சம்பவம் சிக்கோடி காவல் நிலைய எல்லைக்குள் நடந்திருந்தாலும், இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.