அலாஸ்கா மாநிலத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனமழை பெய்துக் கொண்டிருந்தபோது, ஒரு கருப்பு கரடி குடியிருப்பு பகுதியில் வந்து, கரடிகள் நுழைய முடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு குப்பைத் தொட்டியை திறக்க முயன்றது.

ஆனால் பலமுறை முயன்றும் அதைத் திறக்க முடியாமல் போனது. இறுதியில் விரக்தியில் அந்த கரடி, குப்பைத் தொட்டியைத் தொடர்ந்து அடித்து “பஞ்ச்” அடிப்பது போல் நடந்தது. அந்த காட்சி கேமராவில் பதிவாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வீடியோவில், கரடி குப்பைத் தொட்டியை நடுத்தெருவுக்கு இழுத்துச் சென்று, அதை கவிழ்த்து, அதன்மேல் தனது பாதங்களை வைத்து அடித்துக் கொண்டிருப்பது போல் காணப்படுகிறது. பலமுறை முயற்சித்தும் தொட்டியின் மூடி திறக்காததால், அலாஸ்காவில் கரடிகளின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த “கரடி-எதிர்ப்பு” குப்பைத் தொட்டிகள் எவ்வளவு பயனுள்ளதாக உள்ளன என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ABC News (@abcnews)

இலையுதிர் காலத்தில் கரடிகள் உறக்கநிலைக்கு (hibernation) தயாராகும் நிலையில், உணவு தேடி அலைந்து திரிந்தபோது இந்த கரடி அந்த இடத்துக்கு வந்திருக்கலாம் என்று அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தனது தோல்வியுற்ற முயற்சிக்குப் பிறகு, கரடி அங்கு இருந்த மக்களுக்கும் சொத்துக்களுக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல், அமைதியாக திரும்பிச் சென்றது.

இந்த நகைச்சுவையான வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் “கரடி அனைத்தையும் முயற்சித்தது, ஆனால் தொட்டி அசையவே இல்லை!” எனக் கூறி சிரித்துள்ளனர். சிலர் இதை “குப்பைத் தொட்டி நிறுவனத்திற்கான சிறந்த விளம்பர வீடியோ” என்றும் பாராட்டியுள்ளனர்.

ஒரு பயனர், “இந்த கரடியின் ‘CPR’ வீடியோவை மருத்துவப் பள்ளியில் கற்பிக்கலாம் – எவ்வளவு மென்மையாக முயன்றது பாருங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொருவர், “ஏழை கரடி பசியுடன் தொட்டியைத் திறக்க முயற்சிக்கிறது” என வருத்தம் தெரிவித்தார்.