கனமழை எச்சரிக்கையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை நீடித்து வருகிறது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 22) மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்துள்ளார்.

மேலும், மற்ற மாவட்டங்களிலும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்குள்ள நிலவரத்தை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. நிலைமையை ஆய்வு செய்த பிறகு, தேவையான இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கல்வித்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான மாவட்ட வாரியான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.