பயணிகளால் நிரம்பிய ரயிலில் நடந்த அருவருப்பான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. சிறுமியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட ஆண் ஒருவர், சக பயணியால் பிடிக்கப்பட்டு வீடியோவில் சிக்கியுள்ளார்.

அந்த ரயிலில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தும், அந்த நபர் சிறுமியின் அருகில் நெருக்கமாக அமர்ந்து அவரிடம் அசிங்கமாக நடந்துகொண்டார். இதனை கவனித்த மற்றொரு பயணி உடனே மொபைலில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பொதுமக்கள் கடும் கோபம் தெரிவித்துள்ளனர்.

 

இந்த வீடியோ எந்த ரயிலில் எடுக்கப்பட்டது, எங்கு நடந்தது என்பதற்கான தெளிவான தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும், சிறுமிகள் பொதுப் பிரதேசங்களில் கூட இவ்வாறான ஆபத்துகளுக்கு ஆளாகின்றனர் என்பதைக் காட்டும் சோகமான சம்பவமாக இது மாறியுள்ளது. வீடியோ எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பயணியிடம் குற்றவாளி தப்பிக்க முயன்றாலும், தனது செயலுக்கான வெட்கத்தில் தலையணிந்துவிட்டார்.

இந்த வீடியோவை @Prajapat204 என்ற பயனாளர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “இவன் தன் வயது மகளுக்கு ஒப்பான சிறுமியிடம் இவ்வாறு நடந்து கொண்டது வெட்கக்கேடானது. இவர்கள் தான் சமூகத்தில் பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இப்படிப் பட்ட அருவருப்பானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”, “வீடியோ எடுத்தவர் உடனே போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். பலரும் “இவர் கைது செய்யப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.