பாம்புகள் பொதுவாக யாரையும் தேவையில்லாமல் தாக்குவதில்லை. அவை தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ அல்லது பயம், பதற்றம் ஏற்படும்போதோ மட்டுமே தாக்குகின்றன. அதனால், பாம்புகளை அநாவசியமாக தொந்தரவு செய்யக் கூடாது, இல்லையெனில் அவை ஆபத்தானவையாக மாறலாம் என்று கூறப்படுகிறது. இதை விளக்கும் ஒரு சுவாரசியமான உதாரணம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில் காணப்பட்டது.

இந்த வீடியோவில், ஒரு பாம்பு ஒரு பலூனை எதிரியாக தவறாக நினைத்து, அதன் எதிர்வினையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவில், ஒரு பாம்பு தன் தலைப்பகுதியை உயர்த்தி, சீறிக்கொண்டு தரையில் இருந்தது. அப்போது, ஒரு நபர் ஒரு பலூனை அதன் முன் கொண்டு வந்தார். இதனால் பாம்பு மேலும் கோபமடைந்து, சில நொடிகள் பலூனை உற்றுப் பார்த்து, பின்னர் தன் முழு பலத்துடன் அதைத் தாக்கியது. பலமுறை தாக்கியும் பலூன் உடையவில்லை. ஆனால், அருகில் அமைதியாக இருந்த மற்றொரு பாம்பு ஒரே தாக்குதலில் பலூனை உடைத்துவிட்டது.

பலூன் உடைந்தவுடன், முதல் பாம்பு பயந்து ஓடியது. இந்தக் காட்சி மிகவும் வேடிக்கையாகவும், அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த வீடியோவை ட்விட்டரில் @Naeemah78347923 என்ற பயனர் “ஒரு பாம்பு பலூனை எதிரியாக தவறாக நினைத்தால்… எவ்வளவு வேகமாக தாக்குகிறது” என்ற தலைப்புடன் பகிர்ந்தார். 15 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை 55,000 முறை பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்தனர்.