சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அற்புதமான சதத்துடன் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் (ODI) அவர் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக முதல் முறையாக களமிறங்கிய கில், வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

முக்கிய வீரர்களான ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஆட்டமிழந்த நிலையில், பொறுப்பாக ஆட வேண்டிய கில், மோசமான ஷாட் ஆடி தனது விக்கெட்டை இழந்தார். பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் வீசிய முதல் பந்தை, லெக் சைடில் ஆட முயன்ற கில், பந்து சரியாக பேட்டில் படாமல், விக்கெட் கீப்பர் பிலிப்பிடம் கேட்ச் ஆனார். இதன்பின் மழை குறுக்கிட்டதால், கில் டிரஸ்ஸிங் ரூமிற்கு திரும்பினார். அங்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பாப்கார்ன் சாப்பிட்டபடி நிதானமாக இருந்தார்..