கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று (அக்.17) விசாரணை நடைபெற்றது. அதில், தவெக கட்சி தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சி அல்ல. எனவே, அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
