தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.