வங்காளதேசத்தின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா உபஜிலா பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த நபர் ஒருவர் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்திருந்த போதிலும், தொடர்ந்து பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவனின் இந்தத் தொடர் நடத்தையால் அவரது தற்போதைய மனைவி கடும் மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளாகியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் கணவன் வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, கோபத்தின் உச்சத்திலிருந்த மனைவி பிளேடால் அவரது பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் கணவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டாரும் உறவினர்களும் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவியைக் கைது செய்து தங்களது காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
