ஒரு குரங்கு மனிதனைப் போல இரண்டு கால்களில் ஓடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் காட்சி நெட்டிசன்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், “இவர்கள் நம் முன்னோர்களா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், ஒரு குரங்கு காட்டுப் பாதையில் மனிதரைப் போல இரண்டு கால்களில் நேராக நடப்பது காணப்படுகிறது. பொதுவாக நான்கு கால்களில் நகரும் குரங்கு, இவ்வாறு இரு கால்களில் தன்னிச்சையாக சவேகமாக ஓடுவதைக் கண்டு அருகிலிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மிதந்தனர்.
அவர்கள் உடனே அந்த காட்சியை தங்கள் கைபேசிகளில் பதிவு செய்தனர். வீடியோவில் குரங்கு எந்த அளவிலும் தடுமாறாமல், துல்லியமான சமநிலையுடன் ஓடுவது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சி வெளிநாட்டிலுள்ள ஒரு இயற்கை பூங்காவில் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த குரங்கு ஏதோ காரணத்தால் தனது ஒரு கையை இழந்ததாகவும், அதன் பிறகு இந்த உடல் குறைபாட்டை சமாளிக்க அது இரண்டு கால்களில் நடக்கும் திறனை வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. அதன் இந்த மன உறுதியும் வாழ்வதற்கான போராட்டமும் பலரின் இதயத்தைத் தொட்டுள்ளது.
slime running
byu/CrunchyZedman inTheYardPodcast
ஒரு பயனர் X தளத்தில், அதன் முயற்சியையும் சுயநம்பிக்கையையும் பார்த்தால், உண்மையிலேயே குரங்குகள் நம் முன்னோர்களாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது,”
என்று கருத்து தெரிவித்தார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களுக்குள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. பலர், இது ஒருவகையான அதிசயம் – இயற்கையின் வலிமை என்ன என்பதை இது நிரூபிக்கிறது,” என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும் மற்றொரு பயனர், இது நம்மை சிரிக்க வைப்பதுடன், உயிர்கள் எவ்வாறு தழுவிக் கொள்ள கற்றுக்கொள்கின்றன என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டு,” என்று கருத்து தெரிவித்தார்.
