செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித உணர்ச்சிகளுடன் இணையும் புதிய எடுத்துக்காட்டாக, ஒரு இளைஞர் தனது காதலிக்கு AI உருவாக்கிய திரைப்பட டிரெய்லர் மூலம் திருமணத்தை முன்மொழிந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவில், தம்பதியினர் ஒரு திரைப்பட இரவுக்காக சோபாவில் அமர்ந்திருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. திரையில் ஒளிபரப்பாகும் டிரெய்லர், ஒரு டிஸ்னி விசித்திரக் கதை போல மாயாஜால காட்சிகளால் நிரம்பியதாகும். அதில், அந்த இருவரின் நட்பிலிருந்து காதலுக்கான பயணத்தை, AI உருவாக்கிய உயிரோட்டமான காட்சிகள் அழகாக சித்தரிக்கின்றன.

டிரெய்லர் முடிவில், திரையில் வரும் நபர் “நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?” எனக் கேட்கும் காட்சியுடன் கதைக்களம் நிறைவடைகிறது. அதே நேரத்தில், வீடியோவில் உள்ள இளைஞர் தனது பாக்கெட்டிலிருந்து மோதிரத்தை எடுத்து, ஒரு முழங்காலில் அமர்ந்து தனது காதலை முன்மொழிகிறார். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட காதலி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீருடன் உடனடியாக “ஆம்” என பதிலளிக்கிறார். இந்த உணர்ச்சிகரமான தருணம் கேமராவில் பதிவாகி, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதுடன் விரைவில் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Marcelo Coelho (@cellocoelho)

சமூக ஊடக பயனர்கள் அந்த இளைஞரின் படைப்பாற்றலையும், AI தொழில்நுட்பத்தை காதல் சைகையாக பயன்படுத்திய விதத்தையும் பாராட்டியுள்ளனர். பலர் கருத்துகளில் “2025 ஆம் ஆண்டின் சிறந்த திருமண முன்மொழிவு விருது இதற்கே உரியது,” என்று புகழ்ந்துள்ளனர். மற்றவர்கள், டிரெய்லரில் உள்ள காட்சிகள் எவ்வளவு யதார்த்தமாகவும் சினிமாவாகவும் இருந்தது என்பதை வியந்தும் பாராட்டியுள்ளனர். மேலும் ஒருவர் தனது கருத்தில், “ஒரு ஆண் ஒரு பெண்ணை உண்மையாக அறிந்து, அவள் விரும்பும் வழியில் அவளை ஆச்சரியப்படுத்துவது தான் உண்மையான காதல்,” என்று எழுதியுள்ளார்.