சமூக ஊடகங்களில் தற்போது ஒரு திகிலூட்டும் காணொளி வேகமாக வைரலாகி வருகிறது. மனிதனின் முதுகுத்தண்டையும் நடுங்க வைக்கும் அந்த வீடியோவில், ஒரு பெரிய மலைப்பாம்பு (Python) ஒரு மனிதனை உயிரோடு மடக்கிப் பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த பாம்பு விஷமற்றது என்றாலும், அதன் மிகுந்த சக்தி மற்றும் பிடி காரணமாக சில நொடிகளில் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
View this post on Instagram
தோராயமாக ஒன்றரை நிமிடம் நீளமான அந்த காணொளியில், ஒரு மனிதன் மலைப்பாம்பை பிடிக்க முயற்சிக்கிறார். ஆரம்பத்தில் அவர் பாம்பின் கழுத்தைப் பிடித்துக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் சில நொடிகளில், பாம்பு திடீரென திரும்பி தனது உடலை முழுமையாக அந்த மனிதனைச் சுற்றி வலுவாகச் சுருக்குகிறது. அந்த மனிதன் தன்னை விடுவிக்க கடுமையாக போராடுவதை வீடியோவில் காணலாம். அவன் மூச்சு விடுவதற்குக் கூட பாடுபடுவது போல தெரிகிறது. காட்சியின் தீவிரத்தால் பார்ப்பவர்களே பயமடைந்தனர். வீடியோவின் இறுதியில், அந்த மனிதன் எப்படியோ பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்கிறார். ஆனால் அந்த சில நொடிகள் முழுவதும் மனிதன்–பாம்பு போராட்டம் போல் காட்சி அமைந்துள்ளது.
மேலும் இந்தக் காட்சியால் இணையவாசிகள் நடுங்கிப் போனனர். சிலர் “இது உண்மையா, AI உருவாக்கியதா?” என்று கேள்வி எழுப்பினர். மற்றவர்கள் “இது பைத்தியக்காரத்தனம்! உயிருடன் விளையாடும் முயற்சி,” எனக் கூறினர்.
