கரூரில் நடைபெற்ற தமிழக  வெற்றி கழகக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதே ஒரு முக்கிய காரணம் என சமூகத்தில் பலரும் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்.15) விளக்கமளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நெரிசல் காரணமாக பொதுமக்களில் பலர் நிகழ்ச்சிக்கான ஜெனரேட்டர் அமைந்துள்ள அறைக்குள் நுழைந்தனர். அப்போது, அவ்விடம் மின்சாரம் செலுத்தப்பட்டிருந்தால் பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருந்தது” என தெரிவித்தார்.

மேலும், இதனை கணித்து, பாதுகாப்பு நோக்கில் ஜெனரேட்டரை இயக்கிய தொழில்நுட்ப நிபுணர், தற்காலிகமாக மின்சாரம் துண்டித்ததார் என  ஸ்டாலின் விளக்கியுள்ளார்.