தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்.15) நடைபெற்ற கூட்டத்தில் கரூர் நிகழ்வை மையமாகக் கொண்டு மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் காரசார கருத்துப் பகிர்வில் ஈடுபட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது, “கரூர் துயர சம்பவத்தில் அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. தவெக கட்சியினர் ஒழுங்கற்ற ஏற்பாடுகளை செய்ததாலே நெரிசல் ஏற்பட்டது” எனக் கூறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனையடுத்து சட்டப்பேரவையில் எழுந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில்தான் தவெகவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது அரசின் இரட்டைநடையை காட்டுகிறது. முன்னெச்சரிக்கைகள் எதுவும் அரசு மேற்கொள்ளவில்லை” என சாடினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “கூட்டணிக்கு ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறார்” என குறைசொல்லும் வகையில் பதிலடி கொடுத்தார். இவ்வாறு சட்டப்பேரவையில் ஏற்பட்ட இந்த நேரடி மோதல் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
