கரூர் மாவட்டத்தில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று (அக்.14) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், இன்று (அக்.15) சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றிய போது, “இந்த துயர சம்பவம் குறித்து தவெக கட்சியினர் சரியான முன்கூட்டிய ஏற்பாடுகளை செய்யவில்லை” எனக் குற்றம்சாட்டினார். விழிப்புணர்வும் பாதுகாப்பும் இல்லாமல் கூட்டம் நடத்தப்பட்டது தான் இந்த விபத்திற்கு காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து கரூருக்கு இரவே சென்றது குறித்து விளக்கம் அளித்த முதல்வர், “இந்த துயர சம்பவத்தை அறிந்தவுடன் மனம் மிகுந்த வேதனையில் மூழ்கினேன். அந்த வேதனையுடன் வீட்டில் இருக்க முடியாமல், உடனடியாக இரவில் கரூருக்குச் சென்றேன்” என உருக்கமாக தெரிவித்தார். மக்கள் பாதுகாப்பே அரசு பிரதானக் கவலையெனவும், அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
