சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 206 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 94600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11825 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 11,869 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 206 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 206000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.